Tamil & Hindi - House After 4 Days -750

     

 நான் என் அம்மா வீட்டுக்கு போறேன் 

    ( என்னோடய English , தமிழ் , हिंदी   750                     பிளாக் - வாட்ஸ் ஆப் பதிவு ) 




என்னாங்க... "சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கா... நான் ரயிலேறினப் பிறகு எதையும் மறந்துட மாட்டீங்களே"...


"மாட்டேன்"...


"எதச் சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுங்க"...


"கவலை படாம போயிட்டு வாம்மா நாலே நாளுதானே நான் பாத்துக்கிறேன்"...


"உங்கள நம்ப முடியாது எதுக்கும் இன்னொரு தடவ பாயிண்ட் பாயிண்ட்டா சொல்லிடுறேன்"... பாயிண்ட் நம்பர் 1. "வீட்டல வச்சது வச்சப்படி இருக்கனும் எதாவது எடம் மாறியிருந்ததுன்னா எக்கச்சக்கமா கடுப்பாயிடுவேன்"...


பாயிண்ட் நம்பர் 2. "சமையல் கட்ட நீட்டா தொடச்சி வச்சிருக்கேன் காபி டீ போட்டு சாப்ட்டா டம்ளரையும் பால் காய்ச்சுன பாத்திரத்தையும் காய விடமா உடனே கழுவி கவுத்தி வச்சிடனும்"...


"உத்தரவு"...


பாயிண்ட் நம்பர் 3. "சோறு மட்டும் சமைச்சிக்குங்க பக்கத்து வீடுகள்ல இருக்கிற சுந்தரியக்காவும் மாலதியும் அவங்க வீட்டு கொழம்பு கூட்டுப் பொரியல கொண்டு வந்து கொடுப்பாங்க அத யூஸ் பண்ணிட்டு மறக்காம பாத்திரத்த கழுவி அவங்கள்ட்ட கொடுத்துடுங்க அப்பத்தான் மறுநாளுக்கும் கொழம்பு வரும்"...


"சரிம்மா"....


பாயிண்ட் 4. " பொண்ணுங்கள கூடப் பொறந்தவங்களா பாருங்க அனாவசியமா வழியாதீங்க."..


"ம்ம்...ம்ம்"..


பாயிண்ட் நம்பர் 5 . "வீட்ல நான் இல்லன்னு உங்க குடிகார பிரண்டுகள கூப்ட்டு வந்து கூத்தடிச்சி ஏரியால உங்களுக்கு இருக்கிற நல்ல பேர கெடுத்துக்காதீங்க"...


"ஓக்கேம்மா"...


பாயிண்ட் 6. "அடக்க ஒடுக்கமா இருங்க... வீட்ட விட்டு வெளிய போனா நீட்டா தலைய சீவி பவுடர் போட்டு போங்க பாண்டை மாதிரி போகாதீங்க"...


"சரிம்மா"...


பாயிண்ட் நம்பர் 7. "எங்கையாவது பணத்த ஒளிச்சி வச்சிருக்கேனான்னு எலி மாதிரி எல்லாத்தையும் உருட்டாதீங்க பீரோல கணிசமா பணத்த எண்ணி வச்சிருக்கேன் வேணும்னா எடுத்து செலவு பண்ணுங்க... ஆனா நான் வர்றதுக்குள்ள வச்சிடுங்க, அப்படி வைக்கலன்னா பெனால்ட்டி போட்டு வாங்கிடுவேன்"...


"உம் பணம் எனக் கெதுக்கு எல்லாம் பத்திரமா இருக்கும் நீ பத்திரமா போயிட்டு வா"...


"அப்புறம் பாயிண்ட் நம்பர் 8."பால் காரன் போட்டுட்டு போற பால் பாக்கெட்ட உடனே எடுத்து கழுவி ஃபிரிஜ்ல வச்சிடுங்க இல்லன்னா பூனை தூக்கிட்டுப் போயிடும்...என்ன கேக்குறீங்களா"...!?


"கேக்குது... கேக்குது"...


"அப்புறம் பாயிண்ட்"....


"யம்மா போதும்மா ரொம்ப லென்தியா போகுது... பாரு ரயிலும் பிளாட்பார்ம்ல வத்திட்டிருக்கு"....


"சரி...சரி... சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்"...


நான்காம் நாள் காலை...

-------------------------------------------


"என்னதிது... வீடு வீடு மாதிரியா இருக்கு ஒரே தூசியா இருக்கு... வெளக்க மாத்த எடுத்து கூட்டக் கூடவா உங்களால முடியல"...!?


கூட்டலாம்னு தான் நெனச்சேன்... ஆனா நீ சொன்ன மொத பாயிண்ட் ஞாபகம் வந்துச்சி அதனால வெளக்க மாத்தையே தொடல...


"அப்படி நான் என்ன சொன்னேன்"....!?


"வச்சது வச்ச எடத்துல இருக்கனும்னு நீ தான சொன்ன... அதனால இந்த நாலு நாளும் வெளக்க மாத்த அம்மா சத்தியமா கையிலயே தொடலையே"...!


"அடப்பா`வி"...


                     मै अपने मां के यहां जा रही हूं 

       ( मेरी   English , தமிழ்  या हिंदी में  सात सौ पचासवीं                   ब्लॉग या व्हाट्स आप  पेशकश।  ) 





क्योंजी , आपको सब याद है ना , मेरे रेलगाड़ी पकड़ने के बाद सब भूल तो नहीं  जायेंगें,? 

नही भूलूंगा 

भैंस की तरह ये क्या सर हिला रहे हो 

तुम फिक्र मत करो , सिर्फ चार दिनों के लिऐ ही तो जा रही हो , मैं सब सम्भाल लूंगा

आपका क्या भरोसा , आप को याद दिलाने के लिऐ मैं येक बार फिर दोहराती हूं , ध्यान से सुनियेगा 

१) घर में रखी हुवी चीज अपनी जगह में ही रहने दीजिये , मैने उन्हें खूब सोच समझ कर सजाया है ,  उन्हें बदलने की कोई जरूरत नहीं, आप हमारी गुस्से को  अच्छी तरह  जानते हैं !! कहीं ऐसा ना हों की उसे दिखानी की जरूरत पड़े ।

२ ) रसोई घर को मैं बिल्कुल साफ कर के जा रही हूं , चाय या कॉफी बनाने के बाद , दूध उबाले हुवे  बर्तन और गिलास को उसी वक्त मांज कर , साफ रखियेगा । 

३ ) आप सिर्फ रोटी तैयार कीजियेगा , बाजू के घरवाले , उषा और रनी आपको दाल या सब्जी दे देंगे , बर्तनों को साफ करके उन्हें वापस कर दीजियेगा 

४ ) उनको अपनी बहन मानकर बर्ताव करना , कहीं ऐसा न हो की 

समझ गया , समझ गया , 

५ ) मेरे घर में ना होने का फायदा उठाकर अपने शराबी या बेवड़े पसंद  दोस्तों को बुलाकर घर का सत्यानाश न करना , बची कुची अपनी इज्जत को मोहल्ले में बचाकर  रखना ।

बिल्कुल , मै वही करूंगा जो तुम चाहती हो । 

६ ) घर के अंदर , चूहे की तरह यहां वहां ढूंढने की कोई जरूरत नहीं मैं आप के लिये अलमारी में काफी रूपये रख कर जा रही हूं , उन्हें सम्भल कर खर्च कीजियेगा और मेरे लौटने से पहले उसे वापस रख दीजियेगा , नहीं तो लेने के देने पड़ जायेंगे 

तुम्हारे पैसों को लेकर मै क्या करूंगा , तुम बेफिक्र होकर जाओ 

७ ) दूध के पैकेट को बाहर मत रखियेगा , उसे फ्रिज के अंदर रख दीजियेगा ताकी  उसे बिल्ली चबाकर सारी जगह को .........

समझ गया मैं , गाड़ी आ रही है , चढ़ने के लिऐ तैयार हो जाओ ,


...................         चार दिनों के बाद .............................


हाय , हाय -- घर का क्या हालत बना दिया है आपने , हर जगह ,  कूड़े कचरे से भरे हुवे हैं , झाड़ू वहीं की वहीं है , लगता है आपने उसे इस्तेमाल तो दूर , उसे देखा या छुआ तक नहीं  ।

श्रीमती , मै सोच रहा था , लेकिन तुम्हारी पहली आदेश याद  आने लगी  और उसके साथ में तुम्हारा मशहूर गुस्सा 

वैसा मैने क्या क्या कहा था ? 

तुम ने ही तो कहा था कि , हर चीज को अपनी ही जगह में रहने दें , उन्हें बदलने की कोई जरूरत नहीं , मां कसम तुम्हारे कहने के कारण मैने उसे  पूरे चार दिन  छुआ तक नहीं ,

है राम , इस नासमझ के साथ ज़िंदगी गुजारना   ,  भगवान ही हमारी भला कर सकते हैं !!!!






Comments

Popular posts from this blog

AYODHYA YAATRA DAY 1 - 702

Ayodhya Yaatraa Day -3 - 704

VAIKOM VISIT- IN GODS OWN COUNTRY - 686