HISTORY AMBAI-KALLIDAI BRIDGE - 402
Certain places or monuments have a History of their own and a story to tell . The OLD BRIDGE across the River Tambarabarani between Ambai and Kallidai is one such item . As one belonging to this place , I thought it fit to pass on the Hallowed History of the bridge .
Note : The Tamil Description is not mine but taken from a Facebook Post .
கல்லிடைக்குறிச்சியின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுச் சின்னம்
இது ஏதோ வழக்கமான ஒரு பாலமாக பார்ப்பவர்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த பாலம் சுதந்திர போராட்ட வரலாற்றின் ஓர் அடையாளச் சின்னம் ஆகும்.
கல்லிடைக்குறிச்சி பிராமண சமூகத்தவர் பால கங்காதர திலகரினால் ஈர்க்கப்பட்டு தாங்கள் நடத்தி வந்த பள்ளிக்கு அவரது பெயரை சூட்டியதோடு, சேரன்மகாதேவியில் குருகுலம் நடத்தி வந்த புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் வ.வே.சு. ஐயரிடம் பள்ளி நிர்வாகத்தை ஒப்படைத்தனர். அருகில் இருக்கும் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதி மக்கள் கல்லிடைக்குறிச்சி வருவதற்கு தாமிரபரணி நதி தடையாக இருந்தது. இதில் ஒரு பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். ஆங்கில கிறிஸ்தவ அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.
இதனிடையே 1920 ல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் வ.வே.சு. ஐயரால் தூண்டப்பட்ட, தீவிர ஈடுபாடு கொண்ட கல்லிடைக்குறிச்சி பிராமண சமூக தேசபக்தர்கள் காலனி ஆதிக்க அரசிடம் இருந்து ஒரேயொரு பைசா கூட வாங்காமல் இந்த பாலத்தை கட்ட முடிவு செய்து அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் மக்களிடம் நிதி வசூல் செய்து சொந்தமாக கட்டிய பாலம் இது. (படத்தில் வலது புறம் இருக்கும் பழைய பாலம்) பாலத்தின் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள கல் தூணில் மேற்படி விபரங்களும் நன்கொடை அளித்தவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் போக்குவரத்து நெரிசல் காரணமாக புதிய பாலம் கட்டுவதற்காக இந்த பாலத்தை தகர்க்க முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் இடிக்க முடியாத அளவிற்கு மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டு அருகிலேயே புதிய பாலத்தை கட்டி இருக்கிறார்கள்.
சாலையில் பயணம் செல்லும் போது ஏராளமான காட்சிகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறோம். அவற்றுள் சில பெரும் வரலாற்று பொக்கிஷத்தை தன்னுள்ளே மறைத்து வைத்து கொண்டு அமைதியாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பொக்கிஷங்களில் ஒன்று தான் இந்த பாலமும்.
இந்த வரலாற்று சிறப்பை வழிப்போக்கன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உள்ளூரிலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க அடையாளத்தை எப்படி மறந்தார்கள் என்பது தான் தெரியவில்லை.
எந்த ஒரு சமூகம் தான் சார்ந்த வரலாற்று பெருமைகளை கற்றுக்கொள்ளவில்லையோ அது குறித்து பெருமிதம் கொள்ளவில்லையோ அந்த சமூகம் விரைவில் அழியும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம் சமூகம் அந்த திசையில் தான் பயணப்பட்டு கொண்டு இருக்கிறது.
கொசுறு: அந்நியன் படத்தில் வரும் "அண்டங்காக்கா கொண்டக்காரி" பாடல் காட்சியில் இந்த பாலத்தைக் காணலாம். .
Comments
Post a Comment