Visually Impaired Leading the Way 334
VISUALLY IMPAIRED SHOWING THE WAY
Below is my Translation into English of a WhatsApp post in Tamil which I liked very much. My English with a few concessions here and there could be termed as paasable but my Tamil is woefully inadequate . I request you to bear with me for any mistakes that you might notice in my narration of the original in Tamil .
Xxxxxxxxxxxxxxxcx xxxxxxxxxxxxxxxxx
It was one of those ordinary weekend days in Singapore .
One of the Multi National Industrial Corporations who are also a part of a supply chain where I work had arranged a fund raising Campaign for the Visually Impaired . I got an invite for this show .
Since it was on a weekend , I had my own second thoughts on visiting this show as I was sure that it would be one of those insipid things that hardly had anything entertaining about it . I was mulling if it would be worthwhile to spend the weekend in a more relaxed way instead .
Being single in Singapore has its own drawbacks. You will be at your wits end to spend the time . Whiling away time in Singapore costs money and that too bigtime money . Since this was a charity show and no money was involved , I decided to attend the show and accepted the invite online. I reckoned it would be a nice place to meet new people and spend time .
There were almost 40 people from different walks of life who had assembled for the show. There were many Indians also among the crowd. The general talk meandered around the life in Singapore .
The actual show started with a 15 minute video on the challenges faced by the visually Impaired members in Singapore and how they helped each other in going about their daily lives . How each one helped the other without expecting anything in return . It also highlighted the satisfaction one got out of helping them in any small way .
After the video the show we were escorted to a big hall where we were explained about the next part of the programme . The theme of the show was ,
"PARTAKING YOUR FOOD IN UTTER DARKNESS "
This post is almost entirely devoted to this theme .
The 40 of us , who were unable to see their own fingers or hands because of the sheer darkness were going to have our food in absolute darkness . What else was going to take place in the next 2 hours was carefully explained to us .
For the next 2 hours we the 40 of us were going to be hosted for our Dinner by a team of 3 hosts who were totally visually Impaired . The one leading the team was a female while the other two helping her were both males and importantly all three were vision Impaired .
The leader explained to us the position of the plate and other cutlery in front of us . ( THIS I BELIEVE TO BE A PRACTICE IN ALL BLIND SCHOOLS )
1 The food in front of you is in the following order . Your plate is right in front of you . Other instructions are as per the small hand of a clock facing you .
At time 3 is your spoon
At time 9 is your fork
At time 12 is the bigger serving spoon
At time 2 is an empty glass tumbler
At time 6 is the folded paper napkin
2 Two big jugs will go around you , the one with the smooth rim will have Water and the other with the dotted edges at the rim will have the Orange Juice . You can use your index finger to determine to what level you want the Water and Orange Juice to be filled .
The team leader enquired if everyone had understood what she had just mentioned . After shaking our head in the affirmative each one went enquiring from the others and came to some sort of an understanding
The next One and a Half Hours was the time when in the utter darkness of the room we really opened our eyes .
We are divided into small groups and escorted inside the pitch dark room and assigned chairs around small tables .
This was a new experience to all of us . Normally it was us who were used to serving these people at dinner tables . The roles had now interchanged and it felt strange . It was a full 5 course dinner which included a Welcome Drink , Appetizers, Starters , Main Course and Dessert.
While accepting the invitation online we were asked to specify our eating preferences , veg or otherwise . Being always a veggie , I had mentioned the same . Not once did they miss this small but important fact and the serving was perfect .The refill as the plates were getting empty was amost timed to precision.
After nearly 90 Minutes of the feast and when we were absolutely full , the leader asked us if were full and satisfied and only when all of us gave the answer in the affirmative , the leader turned on the lights .
Each and everyone seated on the dining table had tears streaming down the corner of their eyes . Our Stomachs were full as were our eyes. How lucky are we to see this world in all its glory. This was our realization now .
More than everything else , we realized the handicap all these less endowed ones have to face . These 90 Minutes brought about a total change in our entire outlook towards life .
We understood that , without being thankful for all the things we naturally possess , we are busy endlessly searching , fighting , striving for the happiness which always seems to be missing us .
Without being satisfied with what we do have or possess , we seem to be searching for the unknown that is going to lead us to happiness .
Our three hosts had changed us all into new men and led us to the entrance of a whole new world.
Lead a happy life , thare are innumerable things in your life to be happy about .
Be thankful for all the things you have got without you ever asking for it .
It needed a darkened room in Singapore to open my eyes .
If this post does help in opening your minds eye in any way , i would think that
MY EXPERIENCE WOULD HAVE BEEN
MEANINGFUL
சிங்கப்பூரில்,… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்,...
எங்களுக்கு சப்ளை செய்யும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, பார்வையற்றவர்களுக்கு தொண்டு செய்யும் ஒரு நிறுவனத்துக்கு நிதி திரட்ட, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை நடக்க இருந்த அந்நிகழ்ச்சிக்கு, எனக்கும் அழைப்பு வந்திருந்தது.
அது ஒரு வாரக் கடைசி என்பதால், போகாமல் தட்டிக் கழிக்கவே முதலில் தோன்றியது! காரணம், நிச்சயம் அது உப்புச்சப்பில்லாமல், போர் அடிக்கும் என்ற எண்ணம் தான்.! அந்த வாரக் கடைசியை வேறு மாதிரி, ரிலாக்ஸ் செய்யலாமே, என்று தோன்றியது.
ஆனால், சிங்கப்பூரில் தனியாக வாழ்வதில், சிக்கலும் உண்டு.! நேரத்தை செலவு செய்ய என்ன செய்வது, என்று புரியாமல் போகும்! அந்தக் காரணத்தாலும், எல்லாவற்றுக்கும் செலவாகும் ஊரில்,.. அந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை என்பதாலும், அழைப்பை ஏற்று, ஆன்லைனில் என் வருகையை உறுதி செய்தேன். கொஞ்சம் பொழுது போகும். கொஞ்சம் புது மனிதர்களையும் பார்க்கலாம்.!
பல்வேறு துறைகளிலிருந்து, சுமார் 40 பேர் வந்திருந்தார்கள். சில இந்தியர்களும் கூட! தன்னிச்சையான ஒட்டுதலுடன், சிங்கப்பூரில் வாழ்க்கை பற்றி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன்!
நிகழ்ச்சியில்,... முதலில், சிங்கப்பூரில், பார்வையற்றவர்களின் வாழ்க்கை பற்றிய ஒரு வீடியோ காண்பித்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு எப்படி உதவி, அவர்கள் வாழ்க்கையை நிறைவானதாக ஆக்க முயல்கிறார்கள் என்பது பற்றி! அது ஒரு ஊக்கமும், எழுச்சியும் ஊட்டும்15 நிமிட, கண்திறப்புக் குறும்படம். அதில், பார்வை சரியாக உள்ள சாதாரணமானவர்களும், இந்தப் பார்வை அற்றவர்களுக்கு, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல், எப்படியெல்லாம் தங்களால் ஆனதை செய்து, அவர்கள் வாழ்க்கையை இயல்பானதாக ஆக்க உதவுகிறார்கள் என்று, அழகாய் விவரித்திருந்தார்கள். பார்வையற்றவருக்கு உதவுவதில் கிடைக்கும் நிறைவையும், திருப்தியையும், வெளிச்சமிட்டுக் காட்டினார்கள்!
அந்த வீடியோ முடிந்தவுடன், ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நிகழ்ச்சியின் அடுத்த பகுதி பற்றி விளக்கினார்கள்.
அந்தப் பகுதியின் தீம் : "முழு இருட்டில் உணவு உண்பது!"
இந்தப் பதிவு,... இதைப் பற்றியது தான்.
நாங்கள் 40 பேரும், எங்கள் விரல்களைக் கூட எங்கள் கண்ணால் பார்க்க முடியாத அளவு, கும்மிருட்டான அறையில், எங்கள் இரவு உணவு உண்ணப் போகிறோம்! அடுத்து, வரிசையாக என்னென்ன நடக்கப் போகிறது என்பதை, தெளிவாக விளக்கினார்கள்!
அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு, அந்த இருட்டு அறையில் எங்கள் நாற்பது பேருக்கும், முறையாக உணவு பரிமாறி, எங்களை விருந்துபசாரம் செய்யப் போவது,...
மூன்று, பார்வையற்றவர்கள் குழு!
ஒரு பார்வையற்ற பெண், இந்த வாலண்டீயர் குழுவின் தலைவி. அவருக்கு உதவியாக இரண்டு பார்வையற்ற ஆண்கள்.!
அந்தத் தலைவி, எங்களுக்கு இருட்டில் உணவு உண்பது எப்படி, என்பது பற்றி சிறு குறிப்புக்கள் தந்தார். (பார்வையற்றவர்கள் உலகத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் "விதி"கள் அவை!).
1) உங்கள் சாப்பாட்டு மேஜையில் பின்வரும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்:
நடுவில் நேரெதிரில் இருக்கும் சாப்பாட்டு தட்டுக்கு,...
(கடிகாரத்தின் சிறிய முள்)
-- 3-மணி (காட்டும்) திசையில்,.. ஒரு ஸ்பூன்!
-- 9-மணி திசையில், ஒரு முள்கரண்டி!
-- 12-மணி திசையில், இன்னொரு ஸ்பூன்!
-- 2-மணி திசையில், காலி கண்ணாடி டம்ளர்!
-- 6-மணி திசையில், மடித்த பேப்பர் டவல்!
2) இரண்டு பெரிய ஜக் (கூஜா) கள், எல்லா மேஜைகளுக்கும், சுற்றில் வரும். அவைகளில், பாத்திர வெளிப்பரப்பு டிசைன் எதுவும் இல்லாமல் வழுவழுவென்றிருப்பதில் குடிநீரும்,.. பாத்திர வெளிப்பரப்பு நெளிநெளியாய் இருப்பதில், ஆரஞ்சு ஜூஸும் இருக்கும்.!
3) அந்த கூஜாக்கள் உங்களிடம் வரும் பொழுது, உங்கள் கிளாஸ் டம்ளரில், நிறையும் அளவு தெரிய, உங்கள் ஆட்காட்டி விரலை உள்ளே நுழைத்து, நீரோ அல்லது ஜூஸோ, உங்கள் விரல்முனையை தொடும் வரை விட்டுக் கொள்ள வேண்டும்! (அளவாக டம்ளரில் விட, இதுதான்9 வழி!)
டீம் லீடர் பெண் கேட்டார்: "எல்லாருக்கும் புரிந்ததா?"
எல்லோரும் புரிந்தது என்று மரியாதைக்கு சொல்லி விட்டு, குழப்பம் தீர, அவசரம் அவசரமாக, பக்கத்தில் இருந்தவரிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தோம்!
அடுத்த ஒன்றரை மணி நேரம்,... அந்தக் கும்மிருட்டில்,
எங்களுக்கு கண்-திறப்பு நிகழ்ந்தது!
நாங்கள் நாற்பது பேரும், சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒரு பார்வையற்றவரால், அந்த கும்மிருட்டு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொருவரும், (mஒரு குழுவுக்கு-ஒரு மேஜை) மேஜையைச் சுற்றி இருந்த ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டோம்!
அப்பொழுது,… எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்த விஷயம் இருட்டு அல்ல,... எங்கள் மனத்தில் தோன்றிய, "நாங்கள் தானே உங்களுக்கு இதுபோல் சாதாரணமாக உதவி செய்வோம்,... இப்போது,..!" என்ற எண்ணம் மட்டுமே!எல்லோரும் அவரவர் மேஜையில்/இருக்கையில் அமர்ந்த பின்னர், அந்தப் பார்வையற்ற மூவர்-குழுவால், எங்களுக்கு five-course டின்னர் பரிமாறப்பட்டது - வெல்கம் ட்ரிங்க், அப்பிடைஸர், ஸ்டார்ட்டர்கள், மெயின் கோர்ஸ், மற்றும் டெஸெர்ட் கள் !!!!!
இந்தப் பார்வையற்ற மூவர் குழுவின் பரிமாறலில், எங்களை மிகவும் பிரமிப்பூட்டிய விஷயம் என்ன தெரியுமா?
நாங்கள் ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்யும் பொழுது, சைவமா அசைவமா என்று குறிப்பிடச் சொல்லி, கேட்கப்பட்டது! நான் இயற்கையாக சுத்த சைவம் என்பதால், அதை தேர்ந்தெடுத்திருந்தேன்!
எங்கள் நாற்பது பேரில் இருந்த ஒரு சில சைவ-உணவு உண்பவர்கள் தாறுமாறாக, வெவ்வேறு மேஜைகளில்/இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும்,... சற்றும் தவறாமல், மிகச் சரியாக, அவர்களுக்கு மட்டும், சுத்த சைவ உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது தான்!
அதைவிட பிரமிப்பு,... எங்கள் தட்டு காலியாக ஆக,... சரியாக ஒருவர் வந்து, அடுத்து என்ன உணவு வேண்டும் என்பதைக் கேட்டு, தட்டில் தேவையான அளவு நிரப்பி விட்டுச் சென்றார்! நாங்கள் கொஞ்சம் கூட அடுத்த வாய் உணவுக்காக, காத்திருக்க வேண்டிய அவசியமே வரவில்லை!
கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் கழித்து,.. எங்களுக்கு முழு திருப்தியுடன், வயிறு நிரம்ப உண்டு விட்டோமா என்று, பரிமாறல்-குழுவின் தலைவி கேட்டு, அதை, உறுதி செய்து கொண்டவுடன்,...
அறையின், விளக்குகளை ஆன் செய்தார்!
நாற்பதில், ஒருவர் தவறாமல்,கண்ணில் நீருடன், அந்த அறையை விட்டு வெளியே வந்தோம்!
வயிறு நிறைந்தது.! கண் திறந்தது!
இருவிழிகளில் பார்வையைப் பெற்று, இந்த அழகான உலகைக் காணும் பாக்கியம் பெற்ற நாம், எவ்வளவு அதிருஷ்டம் செய்தவர்கள்,...
என்பதை உணர்ந்தோம்!
அதைவிட முக்கியமாக,... பார்வை இல்லாமல் வாழ்வோரின் வாழ்க்கை, எவ்வளவு சிரமமானது எனும் கண்திறப்பு, எங்கள் மரபணுவில் பதிந்தது! வெறும் இரண்டு மணி நேரம் இருட்டில் இருக்கவே இவ்வளவு சிரமம் என்றால், வாழ்நாள் முழுவதும், அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்கள், சிக்கல்கள், எவ்வளவு இருக்கும், என்று சுலபமாக உணர முடிந்தது!
எங்களுக்கு இயற்கையாக அமையப் பெற்ற பல அதிர்ஷ்டமான விஷயங்களின் அருமையை உணராமல், இன்னமும் இது வேண்டும், அது வேண்டும், என்று அற்ப விஷயங்களுக்காக தேடி, ஓடி, நொந்து, அழுது, விரக்தியுடன் வாழும் வாழ்வின் விசித்திரத்தை,... புரிந்து கொண்டோம்!
உள்ளவைகளுக்கு நன்றியுடன் இல்லாமல்,
இல்லாதவைகளுக்கு குறை சொல்லும்
நன்றி கெட்டத்தனத்தை வெட்கத்துடன் மனதில் பதித்தோம்!!
புது மனிதராக, வாழ்வின் புதுப்பாதையின் ஆரம்பத்தில்,
எங்களைக் கொண்டு நிறுத்தி விட்டுச் சென்றனர், அந்த மூவர்!
சந்தோஷமாக வாழுங்கள்!
சந்தோஷப்பட உங்கள் வாழ்வில் நிறைய இருக்கிறது!
நன்றியுடன் இருங்கள்!
இப்பிறவியை நன்றியுடன் நினைக்க,
நிறைய விஷயங்கள் உள்ளது!
எனக்கு, கண்திறப்பு நிகழ, சிங்கப்பூரில் ஒரு கும்மிருட்டில், இரவு உணவு தேவைப்பட்டது!
உங்களுக்கு,
இந்தப் பதிவே கூட
போதுமானதாக இருந்தால்...
என் அனுபவம், அர்த்தமுள்ளதாக ஆகியிருக்கும்!
Good one. Watch the movie, Wait Until Dark. Audrey Hepburn
ReplyDelete