Nellai Chandra Vilas Hotel - 611

    Nellai Chandra Vilas Hotel 






Old timers of the Erstwhile Tirunelveli District which included the present day Tuticorin and Tenkasi Districts would have had occasions to visit and savour the Delicacies at The Chandra Vilas Hotel next to the Salai Kumaran Temple below the 2 Tier Nellai Road Bridge .

This not so conspicuous Hotel is bereft of any Glow Lamps , Lightings or Display Boards . 

What brings people to this eating house is its  80 year history of service . I remember visiting this place as a youngster with my Parents and much later with my own offsprings . 

Their service and dedication to old time values has stood the test of Time  . That people flock to this place even now is itself a statement of their long held values . 


Below is a post from Facebook which I thought I should share with my friends in the group and other visitors to my Site .

ஜங்ஷன் சாலைகுமரன் கோவிலருகே  உள்ள சந்திரவிலாஸ் ஓட்டலில் சாப்பிடச் சென்றிருந்தோம்.

உள்ளே நுழைந்தவுடனையே , பழங்காலத்து மேஜை -பழங்காலத்து இருக்கைகள்- கை கழுவும் இடம்-  பழங்காலத்து சர்வர்கள் - என்று 80 ஆண்டுகளின் பழமை மாறாமல் அப்படியே வைத்திருக்கின்றார்கள். 


பரிமாறுவதற்கு தட்டுக்கள் கிடையாது வாழை இலைதான். 


மாறாமல் இருப்பது  இருக்கைகளும் சுவர்களும்  மட்டுமல்ல இட்லிகளும் சுவைகளும் அப்படியே  80 வருடத்திற்கு பின்னோக்கிய திருநெல்வேலி மணத்துடனே இருக்கின்றது.


நாங்கள் 5 பேர் சப்பாத்தி -ரொட்டி - இட்லி- ஆனியன் ஊத்தப்பம் -தோசை - காபி என்று சாப்பிட்டுவிட்டு பில் கேட்க , இன்னமும் அந்த காலத்து பாணியிலேயே ஒரு சின்ன துண்டு பேப்பரில் 280 ரூ என்று எழுதிக் கொடுத்தனர்.  பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டால்,  ஒரு ஆளுக்கே 200 ரூ வரும். ஆனால் 5 பேர் சாப்பிட்டு முடித்தும் கூட 280 ரூ தான்.


அந்த காபியை பற்றி சொல்லியே ஆகணும். நாக்கிலேயே சுவை ஒட்டியிருக்குதுன்னு சொல்வோமே அந்த சுவையை இன்றுதான் அனுபவித்தேன். நேற்று இரவு சாப்பிட்ட காபி இன்னமும் நாக்கிலேயே நிற்கின்றது. 


தாமிரபரணி தண்ணி மணத்துடனும், சுவையுடனும், சாம்பாரும் மிளகாய்ச் சட்னியும், குருமாவும் ,  அப்படியே திருநெல்வேலி தாமிரபரணி தண்ணி சுவை, திருநெல்வேலி அல்வாவில் இருப்பது போலவே. 


முன்பெல்லாம் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு வியாபாரத்திற்கும் , பொருட்கள் வாங்குவதற்கும், வந்து விட்டு சினிமா பார்த்துவிட்டு ,  சந்திரவிலாஸ் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு செல்வதைத்தான் வழக்கமாக வைத்துள்ளார்கள் நம் தாத்தா காலத்து ஆட்கள். 


இந்தப் பதிவை படிக்கின்ற பழங்காலத்து ஆட்களுக்கு , இதனுடைய வரலாறும் சுவாரசியங்களும் நினைவிலாடலாம்.


இந்த ஓட்டல் முதலாளி உ.வே.சா வழித்தோன்றல் சாமிநாத அய்யர்! தமிழ்த்தாத்தா, உ.வே.சா., பிறந்த அதே நாள், நட்சத்திரம் மற்றும் கிழமையில் பிறந்தவர் இவர்.


சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஓட்டல் , அந்த பழமையுடனே இன்னமும் இருக்கின்றது. 


இன்றைய இளய தலைமுறைகள், பழங்காலத்து திருநெல்வேலி சமையலையும் சுவையையும் அனுபவிக்க நினைத்தால் நிச்சயாய் இந்த ஓட்டலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.


Their dedication needs to be appreciated . They may not have the outwardly flash of many other more renowned Eating Houses in Tirunelveli but the FOOD on offer here is just incredible. 



Comments

  1. Wonderful Mamaji. Wish I could read the Tamil script easily.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

AYODHYA YAATRA DAY 1 - 702

Ayodhya Yaatraa Day -3 - 704

VAIKOM VISIT- IN GODS OWN COUNTRY - 686